அடிக்கடி ஆளைமாத்தும் மிருணாள் தாகூர்..! இப்ப யாருன்னு தெரியுமா?

 


நம்மை அறியாமல் நம் மனதில் தோன்றும் காதல் பற்றி எந்த ஒரு வரையறையும் நம்மால் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட காதல் நிலையில்லாமல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி ஏற்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு சில நிகழ்வுகள் நிகழ்கிறது. 

அந்த வகையில் 2014ல் மராட்டிய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய மிருணாள் தாகூரின் போக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இவர் துல்கர் சல்மானோடு இணைந்து நடித்த சீதா ராமம் என்ற திரைப்படம் மிக நல்ல வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கொடுத்தது. இதனை அடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாக இருக்கும், இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தீபாவளி சமயத்தில் கூட இவர் விஜய தேவர கொண்டா உடன் இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளி வந்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. 


இந்த கிசுகிசுக்கள் அடங்குவதற்குள் மும்பையில் நடந்த நட்சத்திர தீபாவளி பார்ட்டிக்கு மிருணாள் சென்று இருக்கிறார். அங்கு பாப் பாடகர் பேட்ஷாவுடன் நெருக்கமாக கைகோர்த்து சென்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவியுள்ளது. 

இதனை அடுத்து இவர்கள் இருவரும் டேட்டிங் சென்று இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதற்கு பாடகர் நீங்கள் நினைப்பது உண்மை கிடையாது என்று கூறி முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.