தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மலையாள பட நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவர் ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவரது அம்மாவும் ஒரு மலையாள பட நடிகை தான்.
முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அண்மையில் இவர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பாராட்டுக்கள் கிடைத்தது.
தெலுங்கில் இவர் நடித்த மகாநதி என்ற திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை அதிகளவு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதுவும் இந்த அனுபவமானது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட அனுபவம் என்பதை கூறியிருக்கிறார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் தோழிகளோடு சாலையில் நடந்து போகும் சமயத்தில் குடிகாரன் ஒருவன் தன் மீது சாய்ந்ததாகவும் , அவனை பளார் என அறைந்ததாகவும் கூறிய கீர்த்தி சுரேஷ்.
யாரும் எதிர்பார்க்காத வேலையை அந்த குடிகாரன் என்ன செய்தான் என்று தெரியுமா? சிறிது நேரம் கழித்து அதே குடிகாரன் என் பின்னால் பலமாக அடித்து விட்டு ஓடி விட்டான் என்றும் பிறகு அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம் என கூறியுள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.