தங்கத் தாரகை பெண்ணே வா அருகே.. பட்டில் மிளிரும் வாணி போஜன்..!! - லேட்டஸ்ட் கிளிக்..!

 


தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய வாணி போஜன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவர் விமான பணி பெண்ணாக தனது கேரியரை ஆரம்பித்தவர். எனினும் இவருக்கு மாடலின் துறையில் அதிக ஈடுபாடு இருந்ததின் காரணத்தால் ஓரிரு விளம்பரங்களில் முதலில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இவர் 2010 ஆம் ஆண்டில் ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படங்களுக்கு போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இதனை அடுத்து விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலில் நடித்து புகழ்பெற்றார். மேலும் இவருக்கு 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 


இந்த கேரக்டர் ரோலை சீரும் சிறப்புமாக செய்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து இந்த சீரியல் இவரது திரை வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். அந்த வகையில் இவருக்கு வெள்ளி திரையில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற வாணி போஜன் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் 2020 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளிவந்த ஒ மை கடவுளே படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக, இந்த படம் மாபெரும் கிட்டை தந்தது. 

இதனை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் லாக்கப், மலேசியா டு அமேசியா, ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும், மிரள், பாயும் ஓளி நீ எனக்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 


தற்போது இவர் ட்ரெடிஷனல் பட்டுப் புடவையில் அதற்கு உரிய அணிகலன்களை தங்கத்தில் அணிந்து தரமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தங்க தாமரை மகளே என்ற பாடல் வரிகளை பாடி அவரை வரவேற்று இருக்கிறார்கள். 

இவர் கைகளை உயர்த்தி யாருக்காக காத்திருக்கிறார் என்று கேட்கும்படி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் எதிர்பார்க்காத லைக்கையும் பெற்று விட்டார். மேலும் இந்த புகைப்படத்தில் இவரது கன்னக்குழி அழகாக வெளிப்பட்டுள்ளதால் இந்த குழியில் விழுவதற்கு நாங்கள் தயார் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.