தெலுங்கில் பிரச்சனை இல்ல.. ஆனா, தமிழில் இந்த நடிகர் என்னை கொடுமை படுத்தினார்.! நித்யா மேனன் பகீர் பேச்சு..! - உண்மை என்ன..?

 

தென்னிந்தியத் திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராகவும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகையாகவும் நித்தியாமேனன் விளங்குகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் படத்தில் நடித்த போது ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக கூறிய செய்தி இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இவர் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தாத்துடன் 180 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருப்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். 

 இவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்த பேட்டி தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் இது வரை அவர் நடித்த படங்களில் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொண்டது இல்லை என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 

 ஆனால் தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகளை இவர் நடிக்கும் போது எதிர் கொண்டுள்ளதாகவும், குறிப்பாக ஒரு படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் சமயத்திலேயே தன்னை ஒரு நடிகர் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் தற்போது இந்த பேச்சு தான் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. எனினும் இந்த தகவல் உண்மையா? என்று ஆய்வு செய்து பார்க்கும் போது இந்தச் செய்தி போலியானது என பிரபல பத்திரிக்கையாளர் மனோபாலா விஜயபாலன் கூறியிருக்கிறார். 

மேலும் நித்யா மேனனும் இந்த தகவலுக்கு திட்டவட்டமான மறுப்பை தெரிவித்து இருக்கக் கூடிய நிலையில் இணையத்தில் பரவ கூடிய செய்தி தவறானது என்பது உறுதியாகிவிட்டது. நித்யா மேனன் சொல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக இணையத்தில் தவறாக செய்திகளை பரப்பியுள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். 

இதனைத் தொடர்ந்து தற்போது நித்யா மேனன் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத டி 50 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்குகிறார். கலாநிதி மாறனின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.