பேண்டில் சரவெடி வச்ச மாதிரி இருக்கே..! - டார் டாராக கிழிஞ்ச பேண்டில் நடிகை திவ்யா கணேசன்..!

 


தீபாவளியன்று வித விதமான உடைகளை அணிவதை பார்த்து நாம் மகிழ்ந்திருப்போம். ஆனால் இது போன்ற உடைகளை இதுவரை யாரும் அணியவில்லை என்று கூறக்கூடிய அளவு பேண்டில் சரவெடிகளோடு சகல வித பட்டாசுகளையும் வைத்து ஆங்காங்கே கிழித்து இருக்கும் ஜீன்ஸ் பேன்டை போட்டு திவ்யா கணேசன் தன்னுடைய Instagram பக்கத்தை தெறிக்க விட்டிருக்கிறார். 

இதுவரை இது போன்ற அம்சம் நிறைந்த ஜீன்ஸ் பேன்டை யாரும் அணிந்ததில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த ஜீன்ஸ் பேண்டை போட்டு சீனி வெடியை கையில் வைத்து கொழுத்த கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பயந்து விட்டார்கள். 

சிரித்தபடியே இவர் வத்திக்குச்சியை கையில் வைத்து பட்டாசை கொளுத்தி விடுவாரா? இல்லையா? என்று கேட்கத் தூண்டு கூடிய அளவு இருக்கும் ஒவ்வொரு புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 



இதனை அடுத்து ஒரு சில ரசிகர்கள் வத்திக்குச்சி பத்திக்காதுடா.. என்ற பாடல் வரிகளை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று கையில் இருக்கும் ராக்கெட் நிலவுக்கா? அல்லது சூரியனுக்கா? என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்கள். 

சின்னத்திரை சீரியல் நடிகையான திவ்யா கணேசன் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் கால் பதித்தார். 

இந்த நாடகம் இவருக்கு பெரிய அளவு பெயரை பெற்று தரவில்லை என்று கூறலாம். இதனை அடுத்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு, சுமங்கலி போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 


மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து தற்போது தீபாவளி அன்று இன்ஸ்டாவில் பதிவிட்ட இந்த போட்டோக்கள் தான் ரசிகர்களின் மனதில் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.