ஆண்கள் அதுக்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக இருக்கனும்..! - எச்சரிக்கை விடுத்த பூனம் பாஜ்வா..

 

தமிழ் திரை உலகில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை தான் பூனம் பாஜ்வா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். 

2015 மற்றும் 2016 ஆண்டுகளில் அவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி தந்ததோடு அவருக்கு மிகச் சிறந்த பெயரையும் பெற்று தந்தது. 

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவருக்கு எந்த திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை. எனவே வாய்ப்புக்காக தற்போது காத்திருக்கிறார் என கூறலாம். இதனை அடுத்து சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் ஆண்களைப் பற்றிய சில ரகசியமான தகவல்களை பகிர்ந்து பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். 

மேலும் அந்த வீடியோவில் பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போகலாமா? என்ற கேள்வியை பெண்களிடம் கேட்பார்கள். அதில் பல உள் அர்த்தங்கள் இருக்கும். அந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காபிக்காக தான் தங்களை அழைக்கிறார்கள் என்று நீங்கள் எதார்த்தமாக நினைக்கக் கூடாது. 

இன்று இருக்கக்கூடிய எதார்த்த நிலையை படம் பிடித்து காட்டக் கூடிய வகையில் இவரது பேச்சு உள்ளது என்று கூறலாம். மேலும் பெண்களுக்கு இது போன்ற சந்தர்ப சூழ்நிலைகளை கையாளக்கூடிய வகையை முன்பே திட்டமிட வேண்டும் என்பதை இது உணர்த்தக் கூடிய வகையில் உள்ளது. 

எனவே எந்த ஆண்களையும் எளிதில் நம்பி மோசம் போகக் கூடாது என்பதற்கு இதுபோன்ற பல கோடு இருக்கும். அதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்திவிட்டார். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டு, எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்.