மனைவியை வைச்சு செய்ய தயாரான தனுஷ்..!! - லால் சலாம் தள்ளி போக இதுதான் காரணமா..!



நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமைகள் வளர்ந்து விட்டது. 

இதனை அடுத்து இவர்கள் விரைவில் சமாதானம் ஆகி சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பமே இல்லை என்ற ரீதியில் செயல்பட ஆரம்பித்தார்கள்.

நேரம் எப்போது கிடைக்கும் கட்டிய பொண்டாட்டி பழிவாங்க என தனுஷ் தயாராகி விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது இவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கு இருக்கும் லால் சலாம் படத்தோடு தனுஷின் கேப்டன் மில்லர் படம் மோத தயாராகிவிட்டது. 

இந்த இரண்டு படங்களுமே வரும் பொங்கலுக்கு மோத உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் இருவரது படத்தையும் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு இந்த ஜோடிகள் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 

எனினும் இவர்கள் இதுவரை சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தனுஷை விட்டு பிரிந்த பிறகு சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பொங்கல் என்று எந்த படம் அதிகளவு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என்பதை பட ரிலீஸுக்கு பிறகு நாம் பார்த்து அறிந்து கொள்ளலாம்.