தலைக்கேறிய மது போதையில் காஜல் அகர்வால்..! " - திருமணத்திற்கு முன்பே இப்படியாம்..!!

 

ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதின் காரணத்தால் தமிழில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் காஜல் அகர்வால். இந்த படத்தை அடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்தார். 

ஆனால் அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தான் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், கோமாளி போன்ற படங்களில் நடித்து கலக்கி இருப்பார். 

இதனை அடுத்து தமிழகத்தில் இவருக்கு ரசிகர் படை உருவானது. திரை உலகில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் மகனை பெற்றிருக்கிறார். 

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய நிலையில் பிரசவத்திற்கு பின்பு தனது உடலை ஸ்லிம்மாக மாற்றிவிட்டார். இதனை அடுத்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்போது பார்ட்டி ஒன்றுக்கு மினுக்கும் உடை அணிந்து சென்றிருக்கிறார். 

அதுவும் இரவு நேர பார்ட்டி என்பதால் அந்தப் பார்ட்டியில் தேவைக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடி இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் போட்டு வைரலாக மாற்றிவிட்டார். 

 இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பே இவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்ததா? அல்லது திருமணம் முடிந்த பிறகு தான் இவருக்கு எந்த பழக்கம் ஏற்பட்டதா? என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். 

இன்ஸ்டாகிராமில் தற்போது அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று கூறலாம். நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை வண்ணத்திரை பக்கத்தில் பதிவு செய்யலாம்.