வாரிசு நடிகருடன் காதல்.. - வெளியான புகைப்படம்..! - ரிது வர்மா கொடுத்த அதிரடி பதில்.!

 

தற்போது திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் ரிது வர்மா. தமிழ் திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். 

விஷால் நடிப்பில் வெளி வந்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க கூடிய இவர் விரைவில் வெளிவர உள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். 

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவேற்றுவார். 

இந்த நிலையில் இவர் தற்போது வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகளவு வந்துள்ளது. இதனை அடுத்து இவர் காதலிக்க கூடிய நபர் யார் என்று பலரும் அந்த செய்தியை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். 

இந்த நடிகர் யார் என்று நீங்கள் யூகிக்க நினைக்கலாம். இந்த நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் தேஜை. இவரைத்தான் தற்போது ரிது வர்மா காதலித்து வருவதாக செய்திகள் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரவி வருகிறது. 


இதற்குக் காரணம் அண்மையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிப்பாதியின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணமான தம்பதியர்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் விருந்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரிது வர்மாவும் கலந்து கொண்டிருக்கிறார். 

அதன் பின் வைஷ்ணவ் தேஜ் மற்றும் ரிது வர்மா காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றது போல புகைப்படங்களும் வெளி வந்தது. இதனை அடுத்து நடிகர் வைஷ்ணவ் தேஜ் இது குறித்து பேசி இருக்கிறார். 

அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்வில் திருமணப் பெண்ணின் தோழியாக ரிது வர்மா கலந்து கொண்டிருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த விதமான காதலும் இல்லை. நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்ற தகவல் உண்மையானது அல்ல என்று வெளிப்படையாக கூறி அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரவலாக பரவி அதிக அளவு படிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. உங்களுக்கும் இந்த தகவல் பிடித்திருந்தால் எங்கள் பக்கத்தை மறக்காமல் லைக் செய்யுங்கள்.