திரைத்துறையை பொருத்தவரை காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது தொடர் கதையாக தான் உள்ளது. அதிலும் சின்னத்திரை சீரியல் நடிகர்கள் சீரியல் நடிகைகளை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே மெட்டி ஒலி சீரியலில் நடித்த சேத்தன்- தேவதர்ஷினி தொடங்கி ராஜா ராணி சீரியல் நடித்த ஆர்யா மானசா-சஞ்சீவ் ஜோடியும், சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மெர்சி செந்தில், ஸ்ரீஜா ஜோடியும் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த லிஸ்டில் புதிதாக ஒரு ஜோடி இணைந்து இருப்பது தான் மகிழ்ச்சிகரமான செய்தி என கூறலாம். இவர்கள் யார் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்படும். சன் டிவி சீரியல் பிரபலமான அரவிஷ் மற்றும் ஹரிகா ஜோடி தான்.
இதில் அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான சீரியல் ஆன சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கேரக்டரை செய்து வருகிறார். இவர் தான் திருமகள் சீரியல் நடிகை ஹரிகாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஜோடிகள் காதலித்து வந்த நிலையில் இரண்டு குடும்பத்தாரின் சம்மதம் தற்போது கிடைத்துள்ள காரணத்தால் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள்.
மேலும் தற்போது இவர்கள் இருவரும் திருமணத்திற்காக ஷாப்பிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஜோடிகளின் திருமண தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பதால் எப்போது திருமண தேதியை இவர்கள் அறிவிப்பார்கள் என்றும் சில ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள்.