திரை உலகில் இதுவரை 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.
தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் மாமன்னன் மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தமிழில் பல படங்கள் வந்து சேர்ந்தது. குறிப்பாக சைரன், ரகு தாத்தா, கன்னிவெடி போன்ற படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய விருதைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதே சமயத்தில் இவர் சில கதாபாத்திரங்களை தவறவிட்டேன் என்று வருத்தத்தோடு சொன்ன செய்தி தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதற்குக் காரணம் இவர் 2021 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளி வந்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்து இருந்தாலும், முக்கியமான கதாபாத்திரங்களை தவற விட்டிருப்பது வருத்தத்திற்கு உரியது.
அப்படி என்ன முக்கியமான கதாபாத்திரத்தை இவர் தவறவிட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். அது மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பிரம்மாண்டமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடிக்கக்கூடிய வாய்ப்பை தான் தவற விட்டிருக்கிறார்.
மேலும் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக தான் நாணி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வெளி வந்த மாபெரும் வெற்றி படமான ஷியாம் சிங்கராய் படத்தையும் அவர் தவறவிட்டார்.
மேற்கூறிய இந்த சிறந்த வெற்றி படங்களில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து இன்றும் வருத்தப்படுவதாக அவர் கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.
இனி வரும் நாட்களிலாவது இவருக்கு பிடித்த மிகச் சிறப்பான கேரக்டர் ரோல் இவருக்கு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் பக்கத்தை லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.