தேவிகா, சிவாஜி நட்பை தவறான நினைத்த பெற்ற தாய்..!! - பதிலடி தந்த தேவிகா எப்படி தெரியுமா..?


தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தேவிகாவை இணைத்து சில கிசுகிசுக்கள் வெளிவந்தது. 

எனினும் நடிகர் சிவாஜி மற்றும் பத்மினி நடித்த படங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த காலம் போய் ஒரு காலத்தில் சிவாஜி மற்றும் தேவிகா என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். இதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தந்தது. 

நடிகை தேவிகா பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம் நானும் ஒரு தொழிலாளி என்ற திரைப்படம். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து சிவாஜியோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். 

குறிப்பாக பாவ மன்னிப்பு, பந்த பாசம், அன்னை இல்லம் போன்றவற்றில் நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். அந்த அளவு அன்னோன்யமாக இவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது. 

எனவே தான் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் வேகமாக பரவியது. இதனை அடுத்து இந்த செய்தியை கேள்விப்பட்ட தேவிகாவின் தாயார் சினிமா ஷூட்டிங் தேவிகா கிளம்பும்போதெல்லாம் சிவாஜி இடையே உனக்கு காதல் உள்ளதா? என்று கேட்பாராம். 

ஒரு நாள், இரு நாள் அல்ல பல நாட்கள் என்ற கேள்வியை முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டதை அடுத்து தேவிகா இந்தக் கேள்விக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறார். 

இந்தக் கேள்விக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இவர் இயக்குனர் பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் எஸ் தேவதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தேவிகா கடைசி வரை சிவாஜியை சார் என்ற வார்த்தை சொல்லி அழைத்திருக்கிறாரே தவிர வேறு எந்த விதமான நோக்கத்திலும் அவரோடு பேசியதில்லை. இவரை ஒரு குருவாகவே நினைத்து கடைசி வரை இருந்த தேவிகா தன் குருவுக்கு தன்னால் களங்கம் ஏற்படக் கூடாது என்ற முடிவில் திருமணம் செய்து கொண்டு தாயாரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.