90 காலகட்டத்தில் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர்தான் நடிகை சுகன்யா. இவர் ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நாயகர்களாக திகழ்ந்த கமலஹாசன், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் போன்ற நடிகர்களோடு சேர்ந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
ஆரம்ப காலத்தில் பரதநாட்டியத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்த இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. தன்னுடைய நடனத்தை பல இடங்களில் அரங்கேற்றியவர். இவருக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது.
எனினும் அதனை மறுத்துவிட்டார்.
பள்ளியில் படிக்கும் போது இவருடைய ஜூனியராக இருந்த ஒருவர் அன்பாலயா பிரபாகரனுக்கு உறவுக்காரராம். சுகன்யா அந்த சீனியர் மாணவியை வீட்டில் டிராப் செய்வதற்காக செல்ல அன்பாலயா பிரபாகரன் சுகன்யாவை பார்த்திருக்கிறார்.
இதனை அடுத்து அவர் இயக்குனர் வசந்துடன் வந்து சுகன்யாவின் சுகன்யாவை தன் படத்தில் நடிக்க வைக்க மிகப்பெரிய முயற்சிகளை செய்தால் எனினும் சுகன்யா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்.
இது போலவே சுகன்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை பார்த்த பாரதிராஜா தன் படத்தில் இவரை நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். எனினும் பாரதிராஜாவின் படமும் வேண்டாம் என்று இவர் மறுத்துவிட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் இயக்குனரும் அன்பாலயா பிரபாகரனும் விடாமல் சுகன்யாவை துரத்தி வந்த நிலையில் அவர்களிடம் தப்பிப்பதற்காக பாரதிராஜாவின் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டேன் என்ற பொய்யை சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து இவர்கள் இருவருமே நேராக பாரதிராஜாவிடம் சென்று சுகன்யாவின் கால் சீட்டை கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாரதிராஜா அந்தப் பெண்ணு அப்படியா சொல்லுச்சு.. என்று கேட்டு சுகன்யாவிடம் வந்து பேசிய பிறகு அவர் சற்று பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டார்.
இதற்கு காரணம் இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்துக் கொடு என்று பாரதிராஜா அவரிடம் கேட்டிருக்கிறார். பொய் சொல்லி கையும் களவுமாக சிக்கிய சுகன்யா அப்படித்தான் இவர் வேறு வழியில்லாமல் புது நெல்லு புது நாட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்காக சுகன்யாவிற்கு ஒன்பது விருதுகள் கிடைத்ததாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்