"கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சிம்பு..!" - மனைவியாகும் இளம் நடிகை யார் தெரியுமா?

 

சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது மனதையும் கவர்ந்த நடிகர் சிம்பு, வளர்ந்து ஹீரோவாக மாறியவுடன் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்பட்டார். தமிழில் எம்ஜிஆர் எப்படியோ, அது போல தெலுங்கில் என் டி ஆர் என்று கூறுவார்கள்.
 
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது எஸ் டி ஆர் ஆக திகழும் இவர் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரன். சிலம்பரசன் என்ற அட்டகாசமான தமிழ் பெயரை தான் சுருக்கி சிம்பு என்று அழைக்கிறார்கள். 

 சிம்பு நடிக்கக்கூடிய படங்களில் நடிக்கும் நடிகைகளோடு அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வந்த இவர் குறிப்பாக, நயன்தாரா, ஹன்சிகா ஓபன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தற்போது பிரிந்து விட்டார்கள். 

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கக்கூடிய சிம்பு உடல் எடையை குறைத்து வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் தற்போது சிம்பு பிரபல நடிகையை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் அரசல் புரசலாக வெளி வந்து கோடம்பாக்கத்தையே அசர வைத்துள்ளது என கூறலாம். அந்த நடிகை யார் என தெரிந்தால் உங்களுக்கும் ஆச்சரியம் ஏற்படும். 


இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்தானி. இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாகவும், அந்த காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் எனவே விரைவில் திருமணம் நடக்கும் என்ற செய்தி தான் தற்போது வலையதளத்தை ஆக்கிரமித்துள்ளது. 

ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனினும் சமீபத்தை பேட்டி ஒன்றில் சித்தி இத்தானி தமிழ் நடிகர்களில் ரோஜா பூ கொடுத்து கல்யாணம் செய்ய ஆசைப்பட்டால் அதை சிம்பு தான் செய்வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

எனவே இவர்களது திருமணம் உண்மையில் நடந்தால் ரசிகர்களுக்கு சந்தோசம் தான். விரைவில் அதிகாரப்பூர்வமான செய்திக்காக சிம்புவின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் உண்மையான தகவலை விரைவில் சிம்பு பகிர்வார் என்ற நம்பிக்கையில் பலரும் காத்திருக்கிறார்கள்.