இந்த நடிகரின் அண்ணனை எனக்கு பிடிக்கும்.. மேடையில் உண்மையை உடைத்த நடிகை மீனா..!

 


திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து சிறு வயது முதலே தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி குழந்தை நட்சத்திரமான மீனா ஆரம்பத்தில் ரஜினி அங்கிள் என்று அழைத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். 

வளர்ந்து ஆளான நிலையில் ரஜினியோடு கதாநாயகியாக முத்து படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் சுமார் 40 ஆண்டு காலமாக திரை உலகில் நிலைத்து இருக்கிறார் என்று கூறலாம். 

கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட மீனாவின் கணவர் கொரோனா காலகட்டத்தின் போது மரணம் அடைந்திருக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து மீளா துயரில் இருந்த மீனா அதிலிருந்து வெளிவந்து இருக்கிறார். 

இந்த நிலையில் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அசாத்திய சாதனைகளை செய்த மீனாவிற்கு பாராட்டுகளை தெரிவிக்க கூடிய வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ரஜினி உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மீனாவுடன் பயணித்த அனுபவங்களை அனைவரது முன்னிலையிலும் பகிர்ந்து இருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா மேடையில் இருக்கும் போது அவரிடம் நடிகை மீனா உங்களை விட உங்கள் அண்ணாவைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் தான் நமக்கு என்ன வருவதோ அதை வைத்துக்கொண்டு மிகச்சரியான வகையில் ஸ்டஃப் கொடுப்பார். 

அது மட்டுமல்லாமல் உங்களால் முடிந்ததை பண்ணுங்கள் என்று கூறி விடுவாராம். இதனை அடுத்து பிரபுதேவா 40 ஆண்டுகால நட்பை போல எங்கள் நட்பு 30 ஆண்டுகால நட்பு எப்படி பிரண்டு ஆனோம் என்று தெரியவில்லை என்று மிகவும் காமெடியோடு கூறி இருக்கிறார். 

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. இதனை அடுத்து மீனாவின் 40 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை அனைவரும் நினைவுகூர்ந்து அவருக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.