திருமணத்திற்கு முன்பே தேவயானி இடம் கைவரிசை காட்டிய நடிகர்..!!- திட்டி தீர்த்த தாயார்..!

 

காதல் கோட்டை படத்தின் மூலம் அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு கோட்டையை கட்டி அதில் நிரந்தர அரசியாக ஆண்டு வரும் நடிகை தான் தேவயானி. இவர் தமிழ் சினிமாவில் நீ வருவாயா என்ற படத்தின் மூலம் அவதாரம் எடுத்த இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இயக்குனர் ராஜகுமாரன் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றி பல விதமான வித்தைகளை கற்றுக் கொண்டவர். இவர் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் தேவயானியை கதாநாயகியாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர். 
 
தனது படங்களில் நடிக்கும் போதே இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து குடும்பத்தார் சம்மதம் கிடைக்காத காரணத்தால் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு இன்று பிள்ளை குட்டியோடு சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் youtube சேனல் நிகழ்ச்சிக்கு பேட்டி ஒன்றினை இயக்குனர் ராஜகுமாரன் கொடுத்திருக்கிறார். அதில் நீ வருவாயா என்ற படத்தில் இரு ரோல்கள் இருந்ததாகவும் அதில் அஜித் மற்றும் பார்த்திபனை போடலாம் என்று யோசித்ததாகவும் கூறியிருக்கிறார்கள். 

இதனை அடுத்து அஜித்தை சந்தித்து கதை கூற நானும் தயாரிப்பாளர்களும் சென்றோம். அந்த சமயத்தில் அஜித்துக்கு கார் விபத்து ஏற்பட்டு இருந்த காரணத்தால் அஜித் கதையை மீண்டும் கேட்டு ஓகே சொன்னார். அடுத்த ரோலுக்கு விஜய் செட் ஆகவில்லை, என்பதால் பார்த்திபனை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டோம். 

இந்த சமயத்தில் தான் தேவயானியின் அம்மா தேவயானி படத்தில் நடிப்பதை மட்டும் பார்க்க வேண்டும் வேறு எதுவும் செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால் பார்த்திபனோடு சில படங்களில் தேவயானி நடித்திருந்தபோது டயலாக் மற்றும் காட்சிகளில் பார்த்திபன் அவர் முன்னே வந்து சில கரக்க்ஷன்களை செய்து விட்டாராம். 

பார்த்திபன் மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் இயக்குனர் என்பதால் அது போன்ற விஷயங்களை அடிக்கடி செய்வார்கள். எனவே நடிகை தேவயானியின் தாயார் இந்த படத்தில் அப்படி செய்யாமல் இருக்க முன்கூட்டியே இப்படி கூறி இருக்கிறார். 

மேலும் பார்த்திபன் என் இயக்கத்திற்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர் இந்த படத்தை சிறப்பான முறையில் நடித்தும் கொடுத்திருக்கிறார் என்று இயக்குனர் கூறி இருக்கிறார்.