கணவன் சஞ்சீவ், மனைவி ஆல்யா மானசா என இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாசி வரும் கயல் மற்றும் இனியா சீரியல்களில் ரசிகர்களின் மனதில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து சீரியல் உலகில் சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த ஜோடிகளுக்கு சின்னத்திரையில் பிரபலமான ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஆரம்ப நாட்களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் அரும்பியது.
இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு இந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஐலா என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
ஆல்யா மாசமாக இருக்கும் போது உடல் எடை அதிகரித்து காணப்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு இவரது உடல் எடையை பாதியாக குறைத்து விட்டு ராஜா ராணி இரண்டு சீரியலில் சித்துவுக்கு ஜோடியாக நடித்தார்.
இதனை அடுத்து மகன் பிறந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ரிஷியோடு இணைந்து நடித்து வருகின்ற இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் மிக நன்றாக இருப்பதின் காரணமாக எந்த சீரியல் டிஆர்பி ரேட்டில் உச்சத்தை தொட்டு உள்ளது.
எப்போதுமே இவர்கள் இருவரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கணவரோடு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கும் ஆல்யா கணவர் மூன்றாவது குழந்தைக்கு ஆசைப்படுவது போல காமெடியை செய்து வெளியிட்டு இருக்கிறார்.
இந்த காமெடியை பார்த்த ரசிகர்கள் மூன்றாவது குழந்தை உங்களுக்கு வேணுமா? ஐயோ பாவம் ஆல்யா மானசாவை விட்டு விடுங்க.. அவங்களே ஒரு குழந்தை.. என்று கமெண்ட் செய்து சஞ்சீவை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
இந்த ரீலீஸ் வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோவாக உள்ளதோடு ரசிகர்களால் ரசிக்கப்படக்கூடிய வீடியோவாக மாறிவிட்டது என கூறலாம். நீங்களும் ஒருமுறை அந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் அது உங்களுக்கு பிடிக்கும்.