இது.. என்னடா சோதனை.. தமிழ் படிக்கத் தெரியாத விஜய் மகன் சஞ்சய்..! - சிக்கலில் லைக்கா நிறுவனம்..!

 


தமிழ் திரையுலகை பொருத்தவரை வாரிசுகளின் ஆதிக்கம் எப்போதும் இருப்பது இயல்பு தான். அந்த வகையில் ஒரு மிகச்சிறந்த தமிழ் டைரக்டரின் மகனாக பிறந்து வளர்ந்த விஜய் தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகன் அந்தஸ்தை அடைந்திருக்கிறார். 

அந்த வகையில் இவரது மகன் சஞ்சய் சிறுவனாக இருந்த போதே தனது அப்பா நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து இவரும் இவரது அப்பாவை போல விரைவில் ஹீரோ ஆகி விடுவார் என்று நிறைய பேர் எதிர்பார்த்தார்கள். 

எனினும் சஞ்சய் தனது தாத்தாவைப் போல இயக்குனர் ஆக வெளி நாடு சென்று படித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் விஜய் தன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகளவு சமீப காலமாக எழுந்து வரக்கூடிய சூழ்நிலையில் படிப்பை முடித்துவிட்டு வந்த மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் சஞ்சயின் அம்மா அதாவது தளபதி விஜயின் மனைவி சங்கீதாவின் சிபாரிசு மூலம் லைக்கா நிறுவனத்தில் தயாரிப்பில் வெளி வரக்கூடிய ஒரு படத்தை இயக்க சஞ்சய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

மேலும் இந்த படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த விழாவில் தளபதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படபூஜை முடிந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள திரைப்படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. 

இதற்குக் காரணம் அக்டோபர் மாதத்தில் கதையை முடித்து விடுகிறேன் என்று சொல்லி, தற்போது டிசம்பர் மாதம் வர சில தினங்களே உள்ள நிலையில் திரைப்படத்திற்கான கதையை முடிக்காமல் சஞ்சய் இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால் வெளிநாட்டில் படித்து பழகிய சஞ்சயக்கு தமிழ் படிக்க எழுதத் தெரியாதது. 

எனவே இந்த படத்திற்கு ஆன கதையை ஆங்கிலத்தில் எழுத அதை வேறொருவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதி வருவதால் கால தாமதம் ஆகி உள்ளது. எனவே கதை எப்போதும் முடியும் என்ற குழப்பத்தில் தற்போது லைக்கா நிறுவனம் உள்ளது. 

தமிழை பெருமையாக பேசி படங்களில் நடிக்கக்கூடிய விஜய் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை பாடி அதற்கு நடனத்தை ஆடி அசத்தியவர். எனினும் மகனுக்கு தமிழ் படிக்க வராது என்பதை எப்படி மறந்தார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். 

மேலும் சிலர் ரசிகர்கள் வாய் அளவு சொன்னால் போதாது அதை செயல்படுத்தக்கூடிய ஆளுமை வேண்டும் அது அவர்கள் வீட்டில் இல்லை போல என்று யோசிக்க கூடிய வகையில் பேசி இருக்கிறார்கள்.