“கரகாட்டக்காரன் கனகாவா? இது அடையாளமே தெரியலையே..!” - பிரபலத்தோடு வெளியிட்ட போட்டோ அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 

தமிழகம் எங்கும் பட்டி தொட்டி முதல் வெற்றியினை வாரி குவித்த கரகாட்டக்காரன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு இன்று வரை திரை அரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகை கனகா பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். 

நடிகர் ராமராஜன் அவர்களுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். நடிகை கனகா பழம் பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் என்பது உங்களுக்குத் தெரியும். இவர் பாடகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த வரை திரை உலகில் நடிகையாக மாற்றி விட்டார்கள். 

அதற்கு இவரது கண் அழகு ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். 1989 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு மாபெரும் வெற்றியை தந்தார். 

நடிகை கனகா தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் மலையாளத்தில் 434 நாட்கள் ஓடிய காட்ஃபாதர் படத்தில் நடித்திருக்கிறார். 

மேலும் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த விரலுக்கேத்த வீக்கம் என்ற படத்தில் விவேகுக்கு ஜோடியாக நடித்தார். அது போல 2000 ஆவது ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். இதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார். 

இவர் திரையுலகை விட்டு விலக காரணம் காதல் தோல்வி மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் என்று பலவிதமான கருத்துகளும் நிலவி வருகிறது. அதுபோல் தன் தந்தையின் சொத்து பிரச்சனையும் கனகாவிற்கு இருந்தது. இதன் காரணமாக பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பாழடைந்த பழைய வீட்டில் வசித்து வருகிறார். 


இந்நிலையில் இவருக்கு உதவியாளர் ஒருவர் மட்டும் கூட இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை தவிர தனக்கான வேலைகள் அனைத்தையும் அவரே செய்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அக்கம் பக்கத்தினர் கூட எப்போதாவது ஒரு முறை தான் இவரை பார்க்க முடியுமாம். 

அது போல இவரை பற்றி எந்த பிரபலங்களுக்கும் தெரியவில்லை. இந்நிலையில் குட்டி பத்மினி நடிகை கனகாவின் வீட்டிற்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் கனகா அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறி காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.