சமீபகாலமாக திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான அட்ஜஸ்ட்மென்ட் நிமித்தமான செய்திகள் பரவி உச்சகட்ட நட்சத்திரங்கள் முதல் சினிமாவில் பணியாற்றும் கடைக்கோடி நபர் முதல் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி பெரிய இடியை சமுதாயத்திற்கு தந்துள்ளது.
இந்த நிலையில் திரை உலகில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு பெரிதாக பாதுகாப்பு ஏதும் இல்லை என்ற தகவலை கூறியதோடு மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மொத்த விபரத்தையும் குட்டி பத்மினி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
மேலும் இந்த பேட்டியில் இவர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பேசுகையில் ஒரு நடிகை தனது சொந்த விருப்பத்தின் பெயரில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தவறு இல்லை. அதற்கான உரிமை அந்த நடிகைக்கு உள்ளது என்றார்.
ஆனால் குறிப்பிட்ட நடிகையை கட்டாயப்படுத்தி அது போன்ற செயல்களில் ஈடுபடுத்த நினைப்பது மிகவும் தவறான ஒன்று. இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் வாரிசு நடிகைகளுக்கு ஏற்படுவதில்லை.
மேலும் வாரிசு நடிகைகளிடம் வாய் திறந்து அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்க முடியாது.
ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இடம் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசினால் என்ன நடக்கும் சற்றே யோசித்துப் பாருங்கள். இவர்களைப் போல இருக்கும் பெரிய நடிகர், நடிகைகளின் வாரிசுகளுக்கு இந்த தொல்லையே இல்லை.
ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் இளம் பெண்கள் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளால் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.
மேலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பிறகு அவர்களுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்று கூட கூற முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் முதல் லைட் மேன் வரை அந்தப் பெண்ணை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த எதார்த்த உண்மையை பேட்டியின் மூலம் இவர் பகிர்ந்து இருந்தாலும், இன்றைய சினிமாவில் இது நடந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை மிக தைரியமாக கூறி இருக்கிறார்.