விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியை உங்களுக்கு நன்றாக நினைவிருக்கலாம். இவர் தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.
பிரபுவோடு இவர் இணைந்த நடித்த குடும்ப படம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளது.
குடும்ப பாங்கான கேரக்டர் ரோல்களை செய்து அசத்துவதில் இவர் வல்லவர்.
சினிமாவில் புது முகங்களின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. இதனை அடுத்து இவர் தற்போது இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்க இருக்கிறார்.
அதுவும் ஒரு முக்கிய நடிகரோடு இணைந்து நடிப்பு நடிக்கிறார்.
இந்த திரைப்படமானது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் திரைப்படமான தக் லைஃப் என்ற திரைப்படம் தான்.
இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, எப்போது திரைக்க வரும் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
மேலும் இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கேரக்டர்களை செய்ய இருக்கிறார்கள்.
மெட்ராஸ் டாக்சிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க கூடிய இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைக்கிறார்.
மேலும் படத்தை ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளி வந்து மக்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்தது.
இந்தத் திரைப்படத்தில் தான் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆனது வரும் ஜனவரியில் ஆரம்பிக்கலாம் என்ற தகவல்கள் தற்போது பரவி வருகிறது.
எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமலஹாசனோடு இணைந்து அபிராமி நடிக்க இருப்பது அவருக்கு மேலும் பல வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறலாம்.