ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆனது தளபதி-க்கு பிடிக்கலையா? - உண்மையை உடைத்த பிரபலம்..!

 


தமிழ் திரையுலகில் முடி சூடாத மன்னராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூறவேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் இவர் பெரிய வெற்றியை தரவில்லை. எனினும் இவரது கடுமையான உழைப்பின் காரணமாக என்று தமிழக இளைஞர்கள் விரும்பும் நடிகராக உச்சத்தை தொட்டிருக்கிறார். 

தமிழைப் பொறுத்தவரை இவர் அப்பா இயக்கிய நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சில படங்கள் இவருக்கு தோல்வியை தந்தாலும், பூவே உனக்காக படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். 

சமீபத்தில் வெளி வந்த லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இதனை அடுத்து தனது 68 ஆவது படத்தில் படு பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் இவர் அரசியலில் நுழைய ஆர்வம் காட்டி வருவதோடு அதற்கான களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இதனை அடுத்து தற்போது சினிமா, அரசியல் என்று இரண்டு பக்கமும் நின்று விளையாடக்கூடிய விஜய் தன் குடும்பத்தை சரியாக கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனம் சமூக ஊடகங்களில் அதிக அளவு ஏற்பட்டு உள்ளது. 

மேலும் தன் பெற்றோர்களுடன் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்போடு மட்டுமல்லாமல், மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை, விரைவில் விவாகரத்து போன்ற பல்வேறு கருத்துக்கள் வெளி வந்து உள்ளது. இந்த நிலையில் தனது மகன் தன்னைப்போல் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று எண்ணிய இவர் அந்த முடிவை தன் மகனிடமே கொடுத்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள். 




இவரது மகன் தற்போது சினிமா படிப்பை முடித்து குறும்படம் இயக்கி இருக்கிறார். இதனை அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ள விஷயத்தை தன் மகனுக்காக சங்கீதா தான் சிபாரிசு செய்து வாங்கி தந்திருப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலன்டாக முடிந்துள்ளது இந்த பூஜைக்கு விஜய் செல்லவில்லை. இதனை பலரும் பல வகைகளில் சுட்டிக்காட்டி பல்வேறு விதமான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதனை அடுத்து விஜய்க்கு ஆதரவாக நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த கருத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவது குறித்து எனக்கே இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் போது அவரைப் பெற்ற விஜய்க்கு அந்த சந்தோஷத்தை விட அதிகமாக இருக்காதா? என கேட்டிருக்கிறார். 

எனவே இது போல விஷயம் தெரியாமல் அனாவசியமான செய்திகளை பரப்புவதை நிறுத்தி விடுங்கள் என்று அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது