தற்போது பாலிவுட் சினிமாவில் களம் இறங்கி மிகச்சிறந்த இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மிருணாள் தாகூர். ஆரம்ப நாட்களில் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பட வாய்ப்புகளை பெற்றார் என கூறலாம்.
சீரியல் நடிகையாக மாறிய இவர் குங்கும் பாக்கியா தொடரில் நடித்து மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியல் தான் தமிழில் டப் செய்யப்பட்டு இனிய இரு மலர்கள் என்ற பெயரில் வெளி வந்தது.
தமிழில் மெகா ஹிட் அடித்த இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு மிக நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அந்த வகையில் இவர் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த லவ் சோனியா என்ற படத்தில் அறிமுகமானார்.
இதனை அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீரா ராமம் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா உலகின் கவனத்தை ஈர்த்தார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இவர் பக்கம் தங்களது பார்வையை செலுத்த ஆரம்பித்தார்கள்.
சீரியல், திரைப்படம் என்பதோடு நின்றுவிடாமல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க படு பிஸியாக தற்போது நடித்த வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர், தற்போது இறுக்கமான உடை அணிந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
கருப்பு நிற மாடல் உடையில் மெர்சலாக காட்சியளித்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வகை வகையாக வர்ணித்து தள்ளினார்கள்.
அந்த வகையில் இவரின் ரசிகர் ஒருவர் இவரது பின்னழகை பார்த்து சட்டி பானை சேப்பாக உள்ளது என்று கமெண்ட் செய்ய, அதற்கு தக்க பதிலடி யை மிருணாள் தந்திருப்பதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டு இருக்கிறார்கள்.
அப்படி என்ன பதிலடியை அவர் கொடுத்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். முதலில் தன் பின் அழகை சட்டி பானையோடு ஒப்பிட்ட அந்த ரசிகருக்கு நன்றியை தெரிவித்த இவர் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பது தெரியுமா? என்ற கேள்வியை முன் வைத்து விட்டார்.
அதனை அடுத்து எல்லோருக்கும் ஒவ்வொரு விதமாக உடல் வடிவம் இருக்கிறது எனக்கு இது போல உடல் வடிவம் உள்ளது. இந்த உடல் வடிவத்தை சிறப்பாக மாற்ற நான் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் பின் அழகு சிறப்பாக அமைய கடுமையான ஒர்க்கவுட்களை செய்ய வேண்டும் அதற்காக நான் பல நேரங்கள் உழைக்கிறேன்.
எனவேதான் இந்த அழகை நான் காட்டுகிறேன், நீங்களும் காட்டுங்கள் என்று படு நேர்த்தியான முறையில் கூலான பதிலை தந்து அனைவரையும் அசர வைத்து விட்டார்.