தென்னிந்திய திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விஸ்வரூப வளர்ச்சியை பெற்றிருக்கிறார் என கூறலாம்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் சுமார் 20 ஆண்டுகள் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
அன்று முதல் இன்று வரை எவர்கிரீன் நடிகையாக திகழும் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
13 ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு திரிஷா தளபதி விஜயோடு இணைந்து நடித்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இவர்களது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இருந்ததாக ரசிகர்கள் அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்த வருகிறார். மேலும் கமலஹாசனோடு இணைந்து மணிரத்தினம் இயக்கம் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
40 வயதை எட்டி இருக்கும் திரிஷா படு பிஸியாக தற்போது இருக்கிறார். எனினும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தன் திருமணம் குறித்து நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி தற்போது வைரலாக மாறி வருகிறது.
இதற்கு காரணம் தன் கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது என்று கூறி இருக்கக்கூடிய இவர், திருமணம் பற்றி கூறும் போது நான் திருமணம் செய்யக்கூடிய நபர் என் மனதுக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்படத்தான் விரும்பவில்லை என்று கூறி இருப்பதோடு, அஜித்தை இவருக்கு மிகவும் பிடிக்கும் அவர் ஒரு ஜென்டில்மேன் என்றும் நல்ல கணவராகவும், அப்பாவாகவும் இருக்கிறார்.
இவரைப்போல ஒருவர் எனக்கு கணவராக வந்தால் சிறப்பாக இருக்கும். அவரைப் போன்றவர்களை தான் பெண்கள் விரும்புவார்கள் என்பதை வெளிப்படையாக திரிஷா பகிர்ந்து இருக்கிறார்.
இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுவதோடு ரசிகர்களால் அதிகளவு கேட்கக்கூடிய விஷயமாகவும் உள்ளது.