தூங்குறதுக்கு முன்ன இத பண்ணினா தான் தூக்கமே வரும்..!! இதனால தான் கல்யாணம் கட்டிக்கல ஷகிலா ஓப்பன் டாக்..!!

 



சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான ஷகீலா கவர்ச்சி ரோலில் படு நெருக்கமாக நடிகர்களோடு நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆனார். 

ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அதிக அளவு பாலியல் காட்சி நிறைந்த படங்களில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். ஷகீலா சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் இவர் புகை பிடித்ததின் காரணத்தால் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். 

இதனை அடுத்து அண்மையில் இவர் பேட்டி ஒன்றில் தான் செய்யாத தவறே இல்லை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தான் செய்த தவறை ஒப்புக் கொள்வதில் தனக்கு எந்த பயமும் இல்லை என்று மிக கேஷுவலாக கூறி இருக்கிறார்.

இவர் 13 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த காரணத்தாலும், பணத்தை சம்பாதித்ததாலும் இவருக்குள் ஒரு ஈகோ வளர்ந்து விட்டதாகவும் எந்த ஒரு நபரின் துணை இல்லாமல் தான் இருக்க முடியும் என்ற தைரியத்தை இது தந்ததாகவும், கூறியதோடு தனக்கு எந்த நபரின் துணையும் வேண்டாம் என்ற எண்ணத்தை பணம் தந்து விட்டதாக கூறியிருக்கிறார். 

இவை எல்லாவற்றையும் விட இவருக்கு இரவு நேரங்களில் அதிக அளவு மது குடிக்க கூடிய பழக்கம் இருந்ததால் தான் திருமணத்தை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கியதாகவும், தன்னால் மற்றொருவரின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்ததாக ஷகீலா கூறியிருக்கிறார். 

திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்ப காலகட்டத்தில் இந்த பழக்கம் ஏற்பட்டதாகவும் பின் அந்த பழக்கத்திற்கு தான் அடிமையாகி விட்டதாகும், இரவு உறங்குவதற்கு முன்பு மது அருந்தாமல் உறங்கினால் தூக்கமே வராத நிலைக்கு தான் தள்ளப்பட்டதாகவும் ஷகிலா கூறியிருக்கிறார். 

மேலும் தன்னால் மற்ற ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். இந்த கெட்ட பழக்கம் இருக்கும் போது திருமணம் செய்தால் அது சரிவராது என்று தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஓப்பன் டாக் தந்திருக்கிறார்.