இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்..! - ஓப்பனாக கூறிய ஸ்ரீதிவ்யா..!

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு ஹீரோயினியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யாவின் முதல் படமே முன்னணி நடிகரான மக்கள் விரும்பும் சிவகார்த்திகேயனின் திரைப்படமாக அமைந்தது இவருக்கு மிகப்பெரிய பிளஸ் என்று கூறலாம். 

தனது முதல் படத்தில் அற்புத நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இவருக்கு நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜ் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப்படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு காக்கி சட்டை என்ற திரைப்படத்தில் நடித்தார். 

அதனை அடுத்து இவருக்கு ஜீவா,ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் உள்ளிட்ட படங்களில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்து இருப்பார். இதனை அடுத்து திரையில் மீண்டும் பல படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். 

இதற்குரிய காரணம் என்ன என்று இன்று வரை தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் தமிழில் ரெண்டு என்கிற படத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் உங்களது காதலர் யார்? எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டது. 

இந்த கேள்விகளுக்கு அவர் சிறப்பான முறையில் பதில் தந்திருக்கிறார். அந்த வகையில் இவரது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்பதை ஆணித்தரமாக கூறியிருப்பதோடு, என்னுடைய காதலனை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று இவர் தெரிவித்ததை அடுத்து யார் இவரின் காதலன் என்று கேட்க அதைப் பற்றியோ? எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதற்கு வெளிப்படையான பதிலை தெரிவிக்கவில்லை. 

எனினும் அவர் திருமணம் செய்து கொண்டால் அவர் காதலிக்கும் நபரை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதை ஓபன் ஆக கூறி பலரையும் அசத்தி விட்டார் எனக் கூறலாம். 

உங்களுக்கு இந்த பதிப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை தருவதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.