விஜய் டிவியில் தற்போது உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் 7 சீசனில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ஐஷு தற்போது தான் செய்த தவறுகளை உணர்ந்து மூன்று பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை நல்ல பெயரை பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் கெட்ட பெயரை எளிதில் சம்பாதித்து விடலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் அதிக அளவு காதல் சர்ச்சையில் சிக்கி வெளியேறிய ஐஷு தற்போது பகிர்ந்து இருக்கும் கருத்து வைரலாகி விட்டது.
அந்த கடிதத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறி இருப்பதோடு, என்னை நம்பிய அனைவரையும் தான் ஏமாற்றி விட்டதாக கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பை தனக்கு கொடுத்திருந்தாலும் தன் பெயரைக் கெடுத்துவிட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதின் மூலம் என்னுடைய குடும்பத்தின் பெயரையும் நான் சீர் அழித்து விட்டேன். எனக்கு என் மீதே மரியாதை இல்லாமல் போய்விட்டது. மேலும் என்னுடைய தவறான செயல்களில் இருந்து யுகேந்திரன், விச்சும்மா, அர்ச்சனா, பிரதீப், மணி ஆகியோர் காப்பாற்ற முயன்றார்கள்.
அவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு சிறப்பாக நாம் செயல்பட்டாலும் எதிர்மறையான விஷயங்களை தான் அதிக அளவு வெளிப்படுத்துகிறார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவள் இல்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.
எனினும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய மேடை இது. இதை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. நான் செய்த தவறுக்காக என்னுடைய குடும்பத்தை நீங்கள் பேச வேண்டாம். அந்த அவமானங்களை நான் சந்திக்க விரும்பவில்லை.
என் மீது எவ்வளவு வேண்டுமானாலும் தாக்குதல்களை நீங்கள் செய்யலாம். ஆனால் என் குடும்பத்தின் மீது அல்ல. இன்று வரை சமூக ஊடகங்களில் எழுந்து வரும் கருத்துக்களையும், வீடியோக்களையும் நான் பார்த்து தான் வருகிறேன்.
இந்த நிகழ்ச்சியால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன்.
இந்த நிகழ்ச்சி என்னை அதற்கு தூண்டி விட்டது. இனி மேலும் உங்களது விமர்சனங்களை எங்கள் குடும்பத்தாரின் மீது செய்யாதீர்கள் என மிகவும் வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.