சீரியல் வாய்ப்பு வேணுமா..? 6 மாசம் எனக்கு அதை பண்ணி விடு..! - இயக்குனரின் முகத்திரையை கிழித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா..!

 

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் வாய்ப்புகளை பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட் அதிக அளவு அரங்கேறி வருகிறது. ஆனால் இவை வெளியே தெரியாமல் அப்படியே மூடி மறைக்கப்படுகிறது. எனினும் போல்டாக இருக்கக்கூடிய சில நடிகைகள் இது பற்றி வெட்ட வெளிச்சமாக பேசி வருகிறார்கள். 
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்த சீரியல் நடிகை லாவண்யா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர். 

சமீபத்தில் தான் இந்த தொடர் முற்றுப்பெற்றது. இதனை அடுத்து இவர் தற்போது பேட்டி ஒன்று அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி மிகத் தெளிவாகவும், போல்டாகவும் பேசி அசத்தியிருக்கிறார். 

நடிகை லாவண்யா மாடலிங் துறையில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய கேரியரில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு தன்னை சீண்டிய இயக்குனர்கள் தொடர்பாக சில விஷயங்களை பகிர அந்த விஷயங்களை தற்போது இணையத்தில் வைரலாகிவிட்டார். 

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அவர் கூறும் போது தனக்கு தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர் ஒருமுறை என்னை காண்டடெக்ட்டில் இல் இருக்கச் சொன்னதாக கூறியிருக்கிறார். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அது வெறும் காண்டெக்ட் ஆக இல்லை. அவர் தன்னுடன் ஆறு மாதம் ஒன்றாக வாழ சொன்னார். 

ஆறு மாதத்திற்கு மேல் வேண்டாம் என்று வாய் கூசாமல் கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் அப்படி செய்தால் நான் வேறு லெவலுக்கு போய் விடுவேன் என்று ஆசை வார்த்தை காட்டியதாக கூறியிருக்கிறார். 

மேலும் மீடியாவில் மூன்று பேர் பெயரை சொல்லி அவர்கள் ஒன்றுமே இல்லாமல் வந்தார்கள். இப்போது வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டார்கள். நீயும் அப்படி இருக்கலாம் என்று பேசிய போது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். 

அதற்கு காரணம் அப்போதுதான் நான் வளர்ந்து வரக்கூடிய நிலையில் இருந்தது தான்.அவன் பேசும்போது நான் எதுவும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன் என்று கூறியிருக்க கூடிய பேச்சு தற்போது ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், சினிமா துறையை பற்றி ஏற்கனவே மோசமாக நினைத்தவர்களுக்கு சாதகமாக தான் உள்ளது என கூறும்படி அமைந்துவிட்டது.