90-களில் சினிமாவில் கனவு கன்னியாக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த நடிகை ரம்பாவை பற்றி அதிகமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. கவர்ச்சியை அள்ளி வழங்கி ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்து இருக்கும் நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.
ரம்பா கனவு கன்னியாக திகழ்ந்ததோடு தொடை அழகி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட நடிகை தற்போது 47 வயதை எட்டி இருக்கும் இவர் குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் ரம்பா திரை உலகிற்கு நடிக்க வருவதாக தற்போது செய்திகள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.
இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் இவர் படு சுட்டியாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் ஜாலியாக நடித்த நடிகைகளின் வரிசையில் இவருக்கு முதல் இடம் கொடுக்கலாம்.
ரம்பா திரைத்துறையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டிவி ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டி இருக்கிறார். இதனை அடுத்து இவர் அதிக அளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.
தற்போது இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என்று சூப்பரான குடும்பத்தில் இருக்கும் இவர் மீண்டும் ரீ என்ட்ரி தருவது பாராட்டுத்தக்க விஷயமாக உள்ளது.
மேலும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பு காரணமாகத்தான் நான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தை தூண்டி உள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தி விட்டது.
கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ரம்பா விரைவில் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
எனவே இனி வரும் நாட்களில் ரம்பா நடிக்க வந்தால் கட்டாயம் அவர் ரசிகர்களின் ஆதரவை மீண்டும் அடைந்து விடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று கூறலாம்.
இவரின் வரவுக்காக இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை இவர் புரிந்து கொண்டு விரைவில் களம் இறங்க வேண்டும்.