அல்வா டா புஜ்ஜூ.. திகட்ட திகட்ட 4 மணி நேரம் அல்வா ஊட்டிய சத்யராஜ்..!! - கூச்சமின்றி கூறிய கஸ்தூரி..!

 

சமீப காலமாக திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய தகவல்கள் அதிகளவு சமூக ஊடகங்களில் வெளி வந்து மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் நடித்த கஸ்தூரி அந்த அல்வா சீனில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். 

நடிகர் சத்தியராஜ் தனது அபார நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்தவர். ஆரம்ப நாட்களில் வில்லனாக நடித்த இவர் பிறகு ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். 

இவர் விழா ஒன்றில் பேசும் போது ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் போது நடிகைகளை அப்பா கட்டிப்பிடித்து அழும்படியான சீன்களை வைக்க வேண்டும் என்று காமெடியாக கூறிய விஷயத்தை லேடிஸ் சூப்பர் ஸ்டார் வெகுவாக ரசித்து கைதட்டியது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். 

தற்போது இந்த பேச்சானது ஊடகங்களில் பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரியை டேக் செய்து அமைதிப்படையில் அல்வா சீனில் சத்தியராஜ் அத்து மீறி இருப்பது போல தோன்றுகிறதே என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார். 


இந்தக் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்து போட்டிருக்கக் கூடிய பதிவில் சத்யராஜ் மிகவும் நல்லவர் என்று கூறினார். மேலும் இந்த அல்வா சீன் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த சீனில் நான் நடிக்க மிகவும் சங்கோஜப்பட்டதை அறிந்து கொண்டு சத்தியராஜ் மிகவும் பக்குவமாகவும், ஜாக்கிரதையாகவும் நடித்திருக்கிறார்.

இந்த காட்சியை படமாக்க சுமார் 4 மணி நேரம் ஆனது. இதை வெறும் நடிப்பாக தான் நாங்கள் நடித்தோம் அந்த சீன் எடுக்கும் போது கூட என் அம்மா என் பக்கத்தில் தான் இருந்தார். 

அதுமட்டுமல்லாமல் ஒரு காட்சியை படமாக்கும் போது மணிவண்ணன் சாரும், சத்யராஜ் சாரும் எப்படி டயலாக்கை எப்படி மாடுலேஷன் பண்ணுகிறார்கள் என்பதை பார்த்து என் அம்மா ஆச்சரியப்பட்டார். 

அந்த சீனில் அவர் மோசமாக நடந்து கொள்ளவில்லை. அமைதிப்படை படத்தில் சத்தியராஜ் உடன் நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. எனவே அல்வா சீன் பற்றிய உங்களது சந்தேகங்களை விட்டு விடுங்கள். 

இந்த சீரியலில் நான் நடித்ததை குறித்து பெருமையாக நினைக்கிறேன் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி தரக்கூடிய வகையில் நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்திருக்கிறார்.