இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கு இவரது கணவரும் பக்கபலமாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
அந்த வகையில் தற்போது ஹன்சிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் அதீத கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.
இதனை அடுத்து இவர் தெலுங்கில் நடித்துள்ள படமான மை நேம் இஸ் ஸ்ருதி விரைவில் வெளிவர உள்ளது. அது போலவே தமிழில் இவர் நடித்த கார்டியன் படமும் அடுத்ததாக திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
இந்த இரண்டு படங்களைத் தவிர தெலுங்கில் 105 நிமிஷம் மற்றும் தமிழில் மேன் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். இதுவும் அடுத்த ஆண்டு வெளி வரக்கூடிய நிலையில் படு வேகமாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதனை அடுத்து மேலும் பல புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் அதிக படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் ஹன்சிகாவிற்கு ஒரு முக்கிய இடம் கிடைக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஹன்சிகா தனது கருத்தை கூறும் போது ரசிகர்களிடம் நான் பெற்ற ஆதரவு மற்றும் அன்பால்தான் இந்த நிலைக்கு நான் உயர்ந்து இருக்கிறேன் என்று தாழ்மையோடு கூறியிருக்கிறார்.
மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி மற்றும் கார்டியன் படங்கள் மிகவும் சிறப்பாக வந்திருக்கும் கண்டிப்பாக இந்த படங்கள் வெற்றி படமாக அமையும் என்பதை கூறியிருக்கிறார்.
ஆக நான்கு படங்களில் நடித்து முடித்திருக்கும் இவர் அடுத்த ஆண்டு இந்த நான்கு படங்கள் ரிலீஸ் ஆகக்கூடிய நிலையில் ரசிகர்களை பாராட்டி இருப்பது மேலும் பல பட வாய்ப்புகளை இவருக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதை உறுதி செய்து விட்டது.