11 வருஷம் இது கிடைக்காமல் வாழ்ந்தேன்.. - மோசமான மேஜெஸ் செய்த ஆசாமிக்கு அர்ச்சனா மகள் பதில்..!


விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை ஆரம்பித்தார். பிறகு ரியாலிட்டி ஷோ, இசை வெளியீட்டு விழா, மூவி ப்ரோமோஷன், செலிபிரிட்டி ஷோ என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய அளவு பிரபலமான நபர் ஆனார். 

இவர் கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரோடு சேர்ந்து இவரது மகள் ஜாராவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். 

குறைந்த வயது உடைய ஜாரா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், இவர் செய்யக்கூடிய விஷயங்களை ட்ரோல் செய்யக்கூடிய அளவு மற்றொரு பக்கமும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

ஜாராவின் மெச்சூரிட்டி பற்றி அடிக்கடி கமாண்டுகளை செய்து வருகிறார்கள். இதனை அடுத்து ஜாராவிற்கு இது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். அந்த வகையில் தன்னை பற்றி தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் நபர்களைப் பற்றி கோபமான பதிவு ஒன்றினை ஜாரா வெளியிட்டு இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அந்த பதிவில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் இப்படி பேசுவீர்கள் என்று மிக மெச்சூரிட்டியோடு கேட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது தேவைதானா? இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். எனது வாழ்க்கையில் எட்டு வயதில் இருந்தே சம்பாதித்த பிரச்சனைகளை பற்றி வெகுவாக எடுத்துக் கூறி இருக்கிறார். 

மேலும் எட்டு வயதில் தனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தொடர்ந்து 11 வருடம் அப்பா இல்லாமல் வாழ்ந்ததாகவும் எமோஷனலான பதிவை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவினை படித்த பலரும் ஜாராவுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். 

இதனை அடுத்து தற்போது ஜாரா சற்று நிம்மதியாக இருக்கிறார் என்று கூறலாம். மேலும் தன்னுடைய மெச்சூரிட்டி பற்றி அதிக கருத்துக்களை பதிவு செய்த நபர்களுக்கு இது சரியான பாடமாக இருக்கும் என கூறலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.