10 ஆண்டு சினிமா வாழ்க்கை.. கமல் அஜித்துக்கு நோ.. சொன்ன பிரபல நடிகை..! - யார் தெரியுமா?

 

அட.. இவர் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் முடிந்து விட்டதா? என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு தற்போது தனது பத்து ஆண்டு கால திரை உலக வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்திருக்கும் நடிகையாக கீர்த்தி சுரேஷ் விளக்குகிறார்.

இவர் 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளி வந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். 

மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக திகழ்ந்த மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்து ஏமாற்றம் அடைந்தார். 




எனினும் அவற்றிலிருந்து மீண்டு எழுந்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இது வரை கீர்த்தி சுரேஷ் திரையுலகுக்கு அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்து இருக்கிறார். 

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த பத்து வருட திரையுலக வாழ்க்கையில் தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் ரஜினி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய கீர்த்தி சுரேஷ், இது வரை கமல் மற்றும் அஜித் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே இவர்கள் இருவரின் படத்தில் நடிக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது பத்தாண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகிறது.