பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு பேசுவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த ரச்சிதா பற்றி உங்களுக்கு நினைவிருக்கும். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
ஆனால் தினேஷ் வெளியில் இருந்து ரச்சிதாவிற்கு தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்ததோடு அவர் பற்றி பேசியும் இருக்கிறார்.
இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று கருதிய நேரத்தில் இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என பலமுறை ரச்சிதா அறிவித்துவிட்டார்.
இந்த சூழ்நிலையில் தற்போது தினேஷ் பிக் பாஸ் 7 சீசனில் வைல்ட் காட் என்ட்ரியில் உள்ளே சென்று இருக்கிறார்.
மேலும் எந்த நிகழ்வில் இவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் தனது முன்னாள் மனைவியை சூட்டிக் காட்டுவது போல இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் அவர் பேசுகையில் என் வாழ்க்கை எட்டு வருடம் பின்னோக்கி போனது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
வாழ்க்கையில் ரொம்ப அன் பிரிடிக்டபில் என்று சொல்லுவார்கள். ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா? என்று யோசிக்க தோன்றக்கூடிய வகையில் என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து விட்டது என்று தினேஷ் மறைமுகமாக தனது எக்ஸ் மனைவியை பேசியிருக்கிறார்.
இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் ரச்சிதா இல்லாத பாதிப்பு இவரை இந்த அளவுக்கு பேச வைத்துள்ளது என்று இவருக்கு ஆறுதல் சொல்லும் படி பல செயல்களை செய்து வருவதோடு ஆறுதலாகவும் பேசி இருக்கிறார்கள்.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் எங்களது வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்யுங்கள். உங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்.