இசையமைப்பாளர் டி இமானின் பேட்டி சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையை புரட்டிப் போடும் வண்ணம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இமான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் அளிக்காத சிவகார்த்திகேயன் அவரது நிலையை தெளிவாக விளக்காமல் இருக்கும் நிலையில் இது பற்றி நடிகை குட்டி பத்மினி சில பகீர் தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் ஆரம்பகால கட்டத்தில் பல திரைப்படங்களில் இருவரின் காமினேஷனில் பல வெற்றிகள் கிடைத்தது அனைவருக்கும் மிக நன்றாக கிடைத்தது. இதை எடுத்து பேட்டி ஒன்றில் இமானிடம் கேட்கப்பட்ட கேள்வி எப்போது சிவகார்த்திகேயனோடு இணைந்து பயணிப்பீர்கள் என்பதுதான்.
இந்தக் கேள்வியை கேட்ட உடனே கோபம் அடைந்த இமான் இனி கனவிலும் கூட சிவகார்த்திகேயனோடு சேர்ந்து, எந்த படமும் செய்ய மாட்டேன். ஏனென்றால் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து விட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
இந்த நிலையில் இமானின் முன்னாள் மனைவி விவாகரத்து செய்ய வேண்டாம் என்று இருவர் இடையே ஒரு பாலம் போல் சிவகார்த்திகேயன் செயல்பட்டு இருக்கிறார் அவர் ஒரு ஜென்டில்மேன் என்று பேசினார்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடிகை குட்டி பத்மினி இமானின் குடும்ப நிலவரங்கள் பற்றி தற்போது சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் இமான் தனது குடும்ப நண்பர் என்று கூறி இருப்பதோடு பல வருடங்களாக இமானுடைய அப்பாவும் இமானையும் தனக்கு நன்றாக தெரியும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இமான் இப்படி ஒரு வீடியோ போட்டியில் பேசுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் எதிர்பாராத நிகழ்வாக அது இருந்தது என்றும் அதை பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்ற வேளையில் தனக்குத் தெரிந்ததை சொல்ல வேண்டும் என்று தான் இந்த கருத்தை பதிவு பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில் இமானுக்கும் அவனுடைய முன்னாள் மனைவி மோனிகாவுக்கும் இடையே பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்தது. இதற்கு காரணம் வேலை விஷயமாக இமான் சில நாட்கள் வெளியே தங்க வேண்டி இருந்ததன் காரணத்தால் வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் இடையே அதிக கருத்து வேறுபாடுகள் நிலவியது.
அதுமட்டுமல்லாமல் இரண்டு மூன்று முறை மோனிகா இமானுடன் சண்டை போட்டுக் கொண்டு தன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அதன் பின் அவரை சமாதானமாகி வந்து போனதாகவும் இது பற்றி போன் பண்ணி தன்னிடம் பேசி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த விஷயங்களை பற்றி இமான் என்னிடம் எதுவும் கூறவில்லை. ஒரு முறை அவருடைய அப்பா என்னிடம் போன் பண்ணி பேச முடியுமா? நேரில் சந்திக்கலாமா? என்று கேட்டார் அப்போதுதான் அவர் அப்பா வீட்டில் நடக்கும் விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
இமானின் முதல் திருமணம் மற்றும் இரண்டாவது திருமண நிகழ்வில் இருந்திருக்கிறேன். இவர் அப்பாவுக்கு ஒரே பிள்ளை என்பதால் அதிகளவு பாசத்தை பெற்றோர்கள் மீது வைத்திருந்தார். இமானுடைய அப்பாவிக்கும் மோனிகாவிற்கும் சுத்தமாக செட்டாகவில்லை.
இதுவே அவரது குடும்ப பிரச்சனைக்கு மூலமாக இருந்தது.
தனது அப்பாவின் மீது அதிக அளவு பாசம் வைத்து இருந்த இமான் தனது குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். எனவேதான் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற உண்மையை தற்போது போட்டு உடைத்து விட்டார்.