தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வர இருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளி அன்று வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைய என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் தாமதமாகவே திரைக்கு வருகிறது என்று கூறலாம்.
இதற்குக் காரணம் எந்த திரைப்படத்தில் சி ஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரிக்வெஸ்ட் வந்ததின் காரணத்தால் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக மாற்றி அமைத்தார்கள். இதனை அடுத்து இந்த படத்திற்கு தேவைப்படக் கூடிய புதிய விஷயங்களை இணைத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் தற்போது பார்க்கும் டீசரில் ஏலியன் வேர்ல்ட் இப்போது தான் உருவாக்கி உள்ளது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் தான் இதைச் செய்ய நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.
இந்தப் படத்தில் ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னதை அடுத்து இந்த படத்தில் நடிக்க நான் சம்மதித்தேன். படத்தின் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் ரவிக்குமாரோடு இணைந்தேன்.
இவர் தமிழ் மீடியத்தில் படித்தவர் என்றாலும் அபாரமான அறிவு திறமை கொண்டவர் என கூறலாம்.
அதற்கு இந்தப் படமே எடுத்துக்காட்டாக இருக்கும் வெறும் 95 நாட்களில் திட்டமிட்டபடி இவர் படத்தை எடுத்து முடித்து விட்டார். அதற்கு இவரது திட்டமிடுதலை காரணம் எனக் கூறலாம்.
அது மட்டும் அல்லாமல் ஐந்து வருடங்களுக்கு முன்பு ரஹ்மானுக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே தற்போது வாங்கிக் கொள்வதாக சொல்லி புதிய ட்யூனையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இதனை அடுத்து இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் திரைப்படம் அயலானாக தான் இருக்கும். இது போலவே ஏலியன்ஸ் பற்றி இதற்கு முன் எம்ஜிஆர் ஒரு படம் செய்ய முயற்சி செய்தார். அதற்குப் பிறகு எஸ்கே தான் இது போன்ற படத்தில் நடித்திருக்கிறார் என கூறலாம்.
வெளிநாட்டுக்கு போகாமலேயே உள்நாட்டிலேயே இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்த போது நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வரவேண்டும் என்று ரவி குமாரிடம் கூறினேன் அவரின் நேர்மைக்காக இந்த படம் சிறப்பாக ஓடி வெற்றி பெறும்.
எனவே இந்தப் படத்தைப் பார்க்க குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்று பொங்கல் அன்று நீங்கள் குதூகலமாக இந்த படத்தை பார்க்கலாம் என்று சிவ கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.