MGR-க்கு பிறகு தமிழ் சினிமாவில் சூரியா செய்யவுள்ள தரமான சம்பவம்..! - அட நெசமாதாங்க..!



கமலஹாசனை போலவே திரை உலகை தற்போது தனக்கு என்று ஓர் இடத்தை பிடிக்க விதவிதமான கெட்டப்புகளில் பெரிய அளவு ரிஸ்க் எடுத்து நடித்து வரும் நடிகர், நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவும் ஒருவர். 

அண்மையில் இவர் நடித்த "சூரரை போற்று" படம் பெரிய அளவில் பேசும் பொருளாக மக்கள் மத்தியில் இடம் பிடித்ததோடு, தேசிய விருதை படத்திற்கு பெற்றுத் தரும் அளவிற்கு அவரது நடிப்பு சிறிய முறையில் இருந்தது. 

கஜினி போன்ற படங்களில் நடிகர் சூர்யா கேரக்டருக்கு தகுந்தது போல் தனது உடல் தோற்றத்தை மாற்றி நடிப்பதிலும் வல்லவராக மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது சூர்யா முதன்முறையாக வித்தியாசமான தோற்றத்தில், அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் வரலாற்று படமான "கங்குவா" திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கி வருவதோடு, பத்து மொழிகளில் இந்த படத்தை உருவாக்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் திஷா பதானி, ரெட்டின், கிங்ஸ்ஸி, கோவை சரளா, யோகி பாபு போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். 

இதனை அடுத்த வரும் ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தை முடித்து விட வேண்டும் என்று மிக மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள். அதே வேளையில் சூர்யா மிக பிஸியாக இந்த படத்திற்காக சிறந்த முறையில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் இதில் ஓர் சிறப்பு சம்பவம் உள்ளது. 

இது என்னவெனில் இந்தப் பட குழுவானது தாய்லாந்துக்குச் சென்று நிஜ விலங்குகளுடன் பயிற்சி எடுக்க போகிறார்கள். அங்கு உண்மையான புலியுடன் சூர்யா பழகி வருகிறார். அதன் பிறகு புலியோடு சண்டை போடக்கூடிய காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக எடுக்கப் போகிறார்கள். 

அதற்காக தன் உயிரையும் பணையம் வைத்து தைரியத்தை வர வைத்துக் கொண்டு இயக்குனர் சொல்வதை எல்லாம் கேட்டு நிஜ புலியுடன் அவர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருவது, அந்த காலத்தில் எம் ஜி ஆர் நிஜப் புலியோடு சண்டை இட்ட காலகட்டத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. மேலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் எந்த அளவிற்கு நாம் இப்போது வளர்ந்து இருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. 

இத்தகைய தொழில்நுட்பங்கள் நம்மிடையே இருந்தும் தாயைக் காத்த தனயன் படத்தில் எம் ஜி ஆர் உண்மையான புலியோடு சண்டை போட்ட காட்சிகளைப் போல, சூர்யா நடிக்கும் இந்தப் பட காட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக மொத்த டீமும் இப்போது சூர்யாவை வைத்து முயற்சி செய்கிறது. 

எனவே எம்ஜிஆர் க்கு பின் நிஜ புலியோடு பழகி சண்டையிட போகும் முதல் இளம் தமிழ் திரைப்பட நடிகர் என்ற பெருமை நடிகர் சூர்யாவிற்கு கிடைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவார் திரைப்படம் பெயரில் மட்டுமல்ல, காட்சிகளிலும் புதுமையை காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பதற்கு இதுவே சாட்சி என கூறலாம்.