தமிழ் சினிமாவில் என்றுமே அசைக்க முடியாத நடிகராக உலக நாயகன் கமலஹாசன் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவரது விக்ரம் திரைப்படம் சமீபத்தில் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்ததை அடுத்து அடுத்தடுத்து படங்களில் கமல் நடித்து வருகிறார்.
அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்க ஒப்பந்த செய்யப்பட்ட படம் தான் KH 234. இந்த படத்தை ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயின் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைக்கிறார்.
மேலும் இந்தப் படத்திற்கான பிரமோ சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இதை கமலஹாசன் பிக் பாஸ் மேடையில் கூறியிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். இந்தப் படத்தில் கமலோடு இது வரை இணைந்து நடிக்காத நடிகையான நயன்தாராவும் நடிக்க இருப்பதாக தற்போது அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்துள்ளது.
எனவே இந்த திரைப்படத்தில் திரிசாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது அது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த சூழ்நிலையில் நயன்தாராவோடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதற்கான அப்டேட்டை கமல் அல்லது மணிரத்தினம் வெளியிட்டால் இந்த இரு நடிகைகளில் யார் கமலுடன் இணைய போகிறார்கள் என்பது தெரியவரும்.
இத்தனை நாள் கமலோடு நடிக்க டிமிக்கி கொடுத்த நயன்தாராவிற்கு இந்த பட வாய்ப்பு கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.
இந்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள் என கூறலாம்.
மேலும் மிகப்பெரிய கூட்டணியில் உருவாகக்கூடிய இந்த திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் படமாக அமையும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை கொடுத்து, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.