குடிகாரனிடம் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்ற தனது அனுபவத்தை எதிர்நீச்சல் நடிகை காயத்ரி அண்மை பேட்டி ஒன்றில் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான எதிர்நீச்சல் தொடரில் விஜே காயத்ரி குணசேகரன் தங்கையான ஆதிரை திருமணம் செய்துள்ள கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடரிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தத் தொடரின் பெயர் அயலி என்பதாகும். இத்தொடர் மூடநம்பிக்கையை பற்றி எடுத்துக்காட்ட கூடியது.
மேலும் இந்த தெடர் 8 எபிசோடுகளைக் கொண்டது. ஜி 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
மேலும் இந்த தொடரில் இவர் பேசிய வசனமான குடும்ப கவுரவத்தை ஏண்டா பெண்களின் காலுக்கு அடியில் தேடுறீங்க என்ற அழுத்தமான வசனம் அனைவரது மனதையும் தொட்டதோடு கைதட்டலையும் பெற்றுத் தந்தது.
இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவம் ஒன்றை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.அது அவர் வெளியூர் சென்றிருந்தபோது குடிபோதையில் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து ஹோட்டல் ரூம் வரை வந்து ரேட் என்ன? என்று கேட்டதாக கூறியிருக்கிறார்.
மேலும் தான் ஓர் கல்லூரி மாணவி என்பதை சொல்லியும் அந்த குடிகாரன் அவர் கூறிய பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஃபாலோ செய்து பிரச்சனை செய்ததாகவும், ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போட்டு கத்திய பின் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரரை மிரட்டி அனுப்பிய மோசமான சம்பவத்தை இன்று வரை மறக்காமல் இருப்பதாக கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே இது போல சிலர் சமயங்களில் நம்மை அறியாமல் நமக்கு துன்பம் வந்து சேருவதும், பெண்கள் விஷயத்தில் அத்துமீறல்கள் நடப்பதும் இயல்பாக மாறிவிட்டது. எவ்வளவு தான் வளர்ச்சியை அடைந்து விட்டாலும் இந்த கணினி யுகத்திலும் வித்தியாசமான டெக்னிக்குகளை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றத் தான் செய்கிறார்கள்.
உங்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏதேனும் உள்ளதா? அப்படி இருந்தால் அவற்றை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இந்த சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவதின் மூலம் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.