"என்ன சொல்றீங்க.. நம்ம DD-க்கு ரெண்டாவது கல்யாணமா..?" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

 


சின்னத்திரையில் ஹீரோயினிக்கு நிகரான ரசிகர்களின் பட்டாளத்திற்கு சொந்தக்காரியாக இருக்கும் தொகுப்பாளனி டிடி @ திவ்யதர்ஷினி பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தொகுத்து வழங்க கூடிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று பலரும் காத்திருப்பார்கள். 

அந்த அளவிற்கு மக்களின் மனதை கவரக்கூடிய வகையில் போர் அடிக்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களை பேட்டி எடுக்கும் நேர்காணல் போன்றவற்றை சீரும் சிறப்புமாக செய்யக்கூடிய திறமை கொண்டவர். 

டிடி என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக் கூடிய வண்ணம் இவரது சொல் ஆற்றல் இருக்கும். சின்னத்திரையில் மட்டும் அல்லாமல் பெரிய திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் எனினும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியிருக்கும் இவர் 2014 இல் அவரது நண்பரும் தொழில் அதிபருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். 

இதனை அடுத்து தற்போது டிடி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளி வந்த வண்ணம் இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக் கூடிய நபர் அவரது குடும்ப நண்பரான கேரளாவை சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த திருமணத்திற்கு திவ்யதர்ஷினியும் ஒப்புதல் தந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தத் திருமணம் பற்றி எந்த ஒரு தகவலையும் டிடி தரப்பில் இருந்து கூறவில்லை. அதுபோல அவர்கள் குடும்பத்தில் இருந்து எவரும் இந்த தகவலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் உண்மையாக இருக்கக்கூடிய பட்சத்தில் டிடியோ அவரது குடும்பத்தைச் சார்ந்த நபர்களோ கட்டாயம் அந்த விஷயத்தை பகிர்வார்கள் என்று ரசிகர்களின் வட்டாரம் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. எது எப்படியோ டிடி அக்காவிற்கு இரண்டாவது திருமணம் நடந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.