தமிழ் திரை உலகின் தற்போது மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமானின் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனை அடுத்து டி. இமான் தனது இரண்டாவது பரபரப்பு பேட்டியை ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே வெளி வந்த இவரது பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வட்டாரத்தை திணற வைத்ததோடு விஷயம் காட்டு தீயாய் வைரலாக பரவியது.
இதற்குக் காரணம் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் கள்ளத்தொடர்பு என்று பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவரக் கூடிய நிலையில் அப்படி எதுவும் கிடையாது என கூறி இருந்தார்.
மேலும் தனது மூத்த மனைவியை நடிகர் சிவகார்த்திகேயனோடு தொடர்புபடுத்தி பேசியதால் ரசிகர்களிடையே கடும் அதிருப்தி நிலவியதோடு யாரை எப்படி எடை போடுவது என்று தெரியவில்லை என்று எண்ணத் தோன்றி உள்ளது.
இவர்களுக்கு இடையே உள்ள அந்த உறவு காரணமாகத்தான் விவாகரத்து பெறப்பட்டதாக கிசுகிசுக்கள் தற்போது பரவலாக அதிகளவு எழுந்ததுள்ளது.
ஆனால் டி. இமானின் மனைவியோ விவாகரத்து நடக்காமல் இருக்க எந்த வகையில் ஒரு சகோதரர் உதவி செய்வாரோ, அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் இதைத்தான் இமான் துரோகம் என்று கூறியிருப்பதாக கூறிவிட்டார்.
மேலும் தற்போது அளித்த பேட்டியில் இமான் தனக்கு செய்த சில பாவங்கள் தனக்கு ஒரு துயரத்தை கொடுத்துள்ளது என்று கூறியதோடு, தனது மகள்கள் எதிர்காலத்தை கருதி சில விஷயங்களை கூறாமல் இருப்பதாகவும், தற்போதும் பள்ளிக்குச் சென்று இரண்டு பெண் பிள்ளைகளையும் பார்த்து வருவதாகவும் ஒரு நாள் நிச்சயம் அவர்கள் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் தான் எந்த விதத்திலும் ஒரு திருட்டு கல்யாணத்தை செய்து கொள்ளவில்லை. பெண் பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டதாகவும், கள்ள உறவில் எப்போதும் தனது திருமண அமையவில்லை என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.
இந்த பேட்டியும் மிகப்பெரிய அதிர்வலைகளை திரைத்துறையில் ஏற்படுத்தி உள்ள நிலையில் எந்த பதிலும் பேசாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் என்ன செய்யப் போகிறார்? என்ன பேசுவார்? என்பதைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.