தமிழ் திரை உலகில் சூரியன் படத்தின் மூலம் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் ரோஜா தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது தன்னை பற்றி அவதூறு பேசி சித்திரவதை செய்த தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணா மூர்த்தி பற்றி கருத்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கண்ணீர் சிந்தி இருக்கிறார்.
எப்போதும் சமுதாயத்தில் பெண்களை ஒரு விளையாட்டு பொருட்களை போல நடத்துவது அவமானத்திற்கு உரியது என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவர், தன்னை சட்டசபையிலும் சிடியை காட்டி கேவலப்படுத்தியதை கூறியதோடு மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தன்னை பற்றி அவதூறாக பேசிய பண்டாரு சத்யநாராயணனின் பேச்சுக்கு அவருடைய மனைவி அவரை பலர் என்று அறைந்து இருக்க வேண்டும். அவர்கள் கட்சியில் இருக்கும் வரை நான் நல்லவள், மற்றொரு கட்சிக்கு சென்ற பின் நடத்தை கெட்டவள் ஆவேனா என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார்.
இத்தனை வளர்ச்சிகள் ஏற்பட்ட பிறக்கும் பெண்களைப் பற்றி இப்படி குறை கூறும் போது எப்படி அரசியலில் பெண்களால் முன்னேறி வர முடியும் என கூறியதோடு, பண்டாரு சத்யநாராயணன் பேச்சு தன்னை புண்படுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்.
ரோஜா அழுதபடி பேசிய வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரோஜா குறித்து அவதூறு பேசிய பண்டாரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து இருக்கிறார்கள்.
இனி மேலாவது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பெண்களைப் பற்றி பேசக்கூடிய அவதூறுகள் மறைய வேண்டும்.எனவே அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல ரோஜாவின் செயல்பாடு உள்ளது என கூறலாம்.