தமிழ் திரையுலகில் இதுவரை அசைக்க முடியாத ஹீரோயின்களில் ஒருவராக இருக்கக்கூடிய நயன்தாரா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருவது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்.
தற்போது நயன்தாராவுக்கே டாப் டப் கொடுக்கக்கூடிய வகையில் லியோ பட நடிகையின் சம்பளம் பல கோடிகளில் எகிறி உள்ளது என்று கூறினால் உங்களுக்கு யார் அந்த நடிகை என்ற எண்ணம் ஏற்படும்.
தமிழ் திரை உலகில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் கால் பதித்திருக்கும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடிய வகையில் ஏன் முன்னணி இடத்தை பிடிக்கக்கூடிய நிலையில் தற்போது அதிக சம்பளத்தை இந்த லியோ பட நாயகி பெற்று இருக்கிறார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவை இதுவரை யாரும் அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று கருதி வந்த வேளையில் நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அந்த நடிகை வேறு யாரும் அல்ல பிஎஸ் ஒன்லி குந்தவையாக கலக்கிய நம்ம திரிஷா தான். பி எஸ் இரண்டிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி என்றும் இளமை மாறாத நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக நடிகை திரிஷா விளங்குகிறார்.
தத்துரூபமான இவரது நடிப்பை பலரும் ரசித்து இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கக்கூடிய ரசிகர்கள் இவரை சிறந்த நடிப்புக்கு அடுத்த வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த வேளையிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர உள்ள லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக களம் இறங்கி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கக்கூடிய படத்தில் கமலுக்கு ஹீரோயினியாக நடிக்க திரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது மேலும் அந்தப் படத்தில் நடிப்பதற்கு இவர் 12 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜப்பான் படத்தில் நடிப்பதற்கு வெறும் பத்து கோடி சம்பளம் வாங்கிய நிலையில் திரிஷாவின் இந்த அதிரடி சம்பள உயர்வைக் கண்டு அடுத்த லேடீஸார் இவர்தான் என்ற பேச்சு தற்போது அடிபட்டு வருகிறது.