தனது 13 வயதிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நடிகை தமன்னா 2005 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழைப் பொறுத்தவரை கேடி எனும் திரைப்படத்தில் நடித்த இவர் வில்லி ரோலை பக்காவாக செய்திருந்தால் இவரையும், ரம்யா கிருஷ்ணனையும் ஒப்பிட்டு பலரும் பத்திரிகைகளில் வர்ணித்து இருந்தார்கள்.
இவரது சிறப்பான நடிப்பை பார்த்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வகையில் கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்த இவர் ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
தமிழ் படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர், அண்மையில் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் அழகாக ஆடியிருக்கிறார்.
தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழும் இவர் அடுத்தடுத்து நடிப்பதற்காக முயற்சி செய்து வருவதோடு சமூக வலைதளங்களிலும் ரீல்ஸ் வீடியோக்களிலும் நடனம் ஆடி பலரையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தமன்னா அஜித் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். அட.. அவர் அப்படி என்னதான் பேசினார் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?.
அவர் பேசியது அஜித்தின் வீரம் படத்தில் நடித்த போது அவரது வயதான தோற்றம் உங்களுக்கு செட்டாகவில்லை என நான் நினைத்தேன்.
அது போல நீங்களும் நினைத்தீர்களா? என்ற கேள்வியை முன் வைத்ததோடு அந்தப் படத்தில் அவர் தலைமுடிக்கு டை அடித்துக் கொண்டு நடித்திருந்தால் பார்ப்பதற்கு இளமையாக காட்சியளித்திருப்பார் எனக் கூறியிருப்பது சிந்திக்க வைத்துள்ளது.
அவர் தனி மனிதர் என்ற பட்சத்தில் எப்படி வேண்டுமென்றாலும் நடந்து கொள்ளக் கூடிய சுதந்திரம் அவருக்கு உள்ளது. மேலும் அது அவரது தனிப்பட்ட விஷயமாக இருக்கும்.
ஆனால் படத்தில் நடிக்கும் போது அவர் டை அடித்துக் கொண்டு நடித்து இருந்தால் உண்மையில் சிறப்பாக இருக்கும்.
இந்த விருப்பத்தை என்னால் அவரிடம் எடுத்து சொல்ல முடியாத நிலையில் தான் நான் அந்தப் படத்தில் நடித்தேன்.
இப்போது என்றால் நான் நிச்சயம் கேட்டிருப்பேன் என் விருப்பத்தை சொல்லி இருப்பேன்.
ஒரு திரைப்படம் பல கோடி ரசிகர்களுக்கு விருந்தாக கூடிய வேளையில் அவர்களுடைய கருத்தையும் கேட்டு அவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்வது ஒரு நடிகருடைய கடமை அதுதான் மிகச்சிறந்த நடிகர் என்பதற்கான அடையாளம்.
எனவே நடிகர் அஜித் தன்னுடைய முடிக்கு டை அடித்துக் கொண்டு நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.