திலகம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் அற்புதமான நடிகர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இவரது நவரச நடிப்பை பலரும் விரும்புவதோடு மட்டுமல்லாமல், இன்று வரை திரைத்துறையில் இவரைப் பார்த்து வசனம் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
தனது அற்புதமான நடிப்பாலும், உடல் மொழியாலும் மக்களை கவர்ந்த சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் செவாலியே சிவாஜி விருதை வென்றவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல் போன்ற படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.
அப்படிப்பட்ட சிவாஜி கணேசனின் சிறப்பான சம்பவத்தைப் பற்றி எந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகராக உங்களால் ரசிக்கப்பட்ட சிவாஜி கணேசன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருக்கும் பகுதியான நயாகரா பகுதியில் ஒருநாள் மேயராக திகழ்ந்து இருக்கிறார் என்றால் இதை உங்களால் நம்ப முடிகிறதா?
என்ன சொல்றீங்க .. தமிழ்நாட்டை ஆள முடியாத சிவாஜிகணேசன் அதுவும் அமெரிக்காவில் மேயரா? என்று உங்கள் எண்ணங்கள் அலை மோதும்.
ஆனால் அந்த நிகழ்வு உண்மை தான். 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடிகர் சிவாஜி கணேசன் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது தான் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இந்த நிகழ்வுக்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல் கலை தூதராக இந்தியாவில் இருந்து வந்திருக்கும் சிவாஜி கணேசனை பெருமைப்படுத்தும் விதமாக நியூயார்க்கில் இருக்கும் நயாக்ரா சிட்டியின் ஒருநாள் மேயராக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரது கையில் அந்த மாநகரத்தின் தங்க சாவியை கொடுத்து கவுரவம் செய்தது.
இதனை அடுத்து ஒரு நாள் மேயர் என்ற பெருமையை அடைந்த திரைப்பட நடிகர் திலகம் சிவாஜி என்ற பெயரை நமது பாரத பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக பிடித்திருக்கிறார்.
அதுமட்டுமா? அங்கு ஒரு நாள் மேயராக பணியாற்றிய பின் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த சிவாஜி கணேசனை வரவேற்க மக்கள் திலகம் எம்ஜிஆர் விமான நிலையத்திற்கு சென்றார் என்ற ருசிகரமான சம்பவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.