தென்னிந்திய திரைத்துறையில் அசைக்க முடியாத முன்னணி நாயகியாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா விளங்குகிறார். இவர் அண்மையில் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார் என கூறலாம். தற்போது பாலிவுட்டில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூல் செய்து மாபெரும் சாதனை புரிந்துள்ளது.
இது வரை படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல வகையான பிசினஸ்களில் ஈடுபட்டு வரும் நயன்தாரா, தற்போது செய்திருக்கும் காரியத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து இப்படி ஒரு பிசினஸ் மூளையா? என்று வியந்திருக்கிறார்கள்.
தற்போது ஒரு மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை திறந்து இருக்கிறார். இந்த நிறுவனமானது அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது.
இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களை நடிகை சமந்தாவுக்கு பரிசு பொருளாக கொடுத்திருக்கிறார்.
இந்த 9 ஸ்கின் தயாரித்த பொருட்களை சமந்தா பயன்படுத்த ஆவலாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் 9 ஸ்கின் "தி ஆல் தி வெரி பெஸ்ட்" என குறிப்பிட்டார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் சிங்கிள் பைசா செலவில்லாமல் சமந்தாவை வைத்து தனது நிறுவனத்திற்கு விளம்பரத்தை செய்துவிட்டார் என கூறியிருக்கிறார்கள்.
ஏற்கனவே சமந்தாவும் நயந்தாராவும் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த தோழிகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக நினைவில் இருக்கலாம்.