மலையாளத் திரை உலகில் தனது 15 வயதிலேயே அறிமுகமாகி சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லட்சுமி மேனன் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவர் நடிகர் பிரபுவின் மகனோடு இணைந்து கும்கி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்ப படக்கூடிய நடிகையாக உயர்ந்தார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்தப் படத்துக்குப் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேர்ந்தது.அந்த வகையில் இவர் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
இதில் நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷாலோடு இணைந்து நடிக்கும் போது பல வகையான கிசுகிசுக்கள் எழுந்தது. எனினும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் நடிப்பில் வெளிவந்த ரெக்க படத்துக்கு பிறகு இவர் ஆள் அடையாளம் தெரியாதபடி சற்று உடல் அமைப்பில் குண்டாகி போனார். மேலும் சினிமாவை விட்டு சில காலம் விளங்கி படிப்பை தொடர ஆரம்பித்த இவர் புலிகுத்தி பாண்டியன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அது போலவே சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி பகுதி 2 படத்தில் திவ்யாவாக நடித்து மீண்டும் அனைவரது மனதிலும் இடத்தை பிடித்தார். இதனை அடுத்து தற்போது மலை, சபதம் போன்ற பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது நடிக்கக்கூடிய மலை திரைப்படத்தில் காமெடி நடிகரான யோகி பாபுவுக்கு மனைவியாக நடித்துள்ள விஷயம் தற்போது பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு உள்ளது.
மேலும் மலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் லக்ஷ்மி மேனனுக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள். இந்த படம் இவருக்கு கண்டிப்பாக வெற்றி படமாக அமைந்து மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.
நீங்களும் இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் இந்த படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் மேலும் உங்களது மேலான கருத்துக்களை வண்ணத்திரை பக்கத்தில் பதிவிடுங்கள்.