லோகேஷ் கனகராஜன் விக்ரம் படத்தை அடுத்து இவரது படம் என்றாலே ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது என கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் தான் லியோ.
இந்தப் படமானது தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி வரக்கூடிய வேளையில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரை அரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தப் படமும் ஒரு மெகா பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இந்த படம் தீனி போடுமா? என்பது அக்டோபர் 19க்கு பிறகு தெரியவரும்.
அக்டோபர் ஐந்தாம் தேதி லியோ படத்தின் டிரைலர் வெளி வந்து ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்தி விட்டது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இருந்து இது வரை இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
அது மட்டுமா? முதல் பாடலான நான் ரெடி வெளியாகி வெளியான உடனேயே அந்த பாடலில் விஜய் சிகரெட்டுடன் ஆடியதால் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இரண்டாவதாக பேடஸ் என்ற பாடல் வெளிவந்தது. இந்த பாடலை ஜெய்லர் படத்தில் வரும் ஹுக்கும் பாடல் வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது என கூறினார்கள்.
தற்போது எந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் அன்பினும் என்ற மூன்றாவது பாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பாடலின் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை திரிஷா தனது சமூக தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவுதான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு அனைவரும் தொடர்ந்து பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது என கூறலாம்.