இவங்க இல்லைன்னா நான் இயக்குனராக வாய்ப்பே இல்லை.. விஜய் மகன் சஞ்சய் பேச்சு..!

 

தற்போது தென்னிந்திய திரை உலகில் குறிப்பாக தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். இவர் பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். 

 எனவே தனது அப்பாவை போலவே தனது மகனும் திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் சினிமா பட்டப்படிப்பை படிக்க வைத்தார். அடுத்து ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக விரைவில் வர இருக்கிறார். 

இதற்காக பல குறும்படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க கூடிய பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. 

இதற்கு காரணம் இவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அப்பா விஜய் தான் என்று பலரும் கருதி வந்த நிலையில், அவர்கள் இருவருமே தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் இல்லை என்ற உண்மையை சஞ்சய் உடைத்திருக்கிறார். 

அப்படி என்றால் இவரது இயக்குனர் கனவு நிறைவேற யார் காரணம் என்ற கேள்வி உங்கள் மத்தியில் எழலாம். அதற்கு உண்மையில் யார் காரணம் என்றால் சஞ்சய் அம்மா சங்கீதா தான். சங்கீதாவின் சிபாரிசின் பேரில் தான் லைக்கா நிறுவனம் பல கோடி செலவு செய்ய முன் வந்துள்ளது. 

 அதுபோலவே ஏற்கனவே விஜயின் பல படங்களின் கதை மற்றும் சில முக்கிய வேலைகளை சங்கீதா கவனித்து வந்திருக்கிறார்.அப்படி தான் தன் மகன் விஷயத்திலும் சங்கீதா எப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லக்ஷ்மணன் தெரிவித்திருக்கக்கூடிய கருத்து தற்போது பரவலாக பேசப்படக்கூடிய பேசும் பொருளாக்கிவிட்டது.

இதனை அடுத்து தனது தாத்தா போல சஞ்சய் இயக்குனர் ஆகிய பல வெற்றி படங்களை தர வேண்டும் என்று இப்போதே விஜயின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.