கூடாத நட்பு தீமையில் முடியும் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது போல தீய பழக்க வழக்கங்களாலும் உடலில் ஆரோக்கியம் சீர்கேடு அடையும் என்பதை நாம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா கமலின் நடிப்பில் வெளி வந்த இந்தியன் படத்தின் மூலம் பரவலாக தமிழக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.
திரை உலகில் முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் இடையில் மது பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வர கடுமையான கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அந்த மது பழக்கத்தில் இருந்து மீண்டு வர அவர் என்னென்ன செய்தார் என்பதை பேட்டி ஒன்றில் வெட்கப்படாமல் கூறியிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது.
இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக காரணம் சில சினிமா காட்சிகளில் நடிக்க கூச்சமாகவும், பயமாகவும் இருந்ததின் காரணத்தால் அந்த பயத்தில் இருந்து வெளி வர மதுவை குடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
மேலும் போதையிலேயே திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தனது நண்பர்களின் தவறான வழிகாட்டுதலின் பெயரில் மது பழக்கத்திற்கு அடிமையாகி மதுவை குடிக்கவில்லை என்றால் தூக்கம் இல்லை என்ற அளவிற்கு அவரது நிலைமை மாறியது.
இதனை அடுத்து புற்றுநோய்க்கு ஆளான போது தான் செய்த தவறை தக்க முறையில் புரிந்து கொண்டதாகவும், மேலும் புற்றுநோயிலிருந்து வெளி வர கடுமையாக போராடி அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக கூறியவர் ஆன்மீகம் யோகா மட்டும் தான் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்ற கருத்தை கூறுகிறார்.
இந்த தைரியத்தை இவருக்கு ஆன்மீகம் மற்றும் யோகா கற்றுத்தந்ததன் காரணத்தால் வைராக்கியத்தோடு போதைப் பழக்கத்தில் இருந்து வெளி வர முடிந்தது என்ற செய்தியை தெரிவித்து இருக்கிறார்.
இது போல பிரபலங்கள் பேட்டி அளிப்பதன் காரணமாக இந்த பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வரும் ரசிகர்கள் அந்த பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு இந்த பேட்டி அவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பை அளிக்கும் என்பதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை.
எனவே மனதை எப்போதும் ஒரு நிலைப்படுத்த யோகாவையும், சீரிய சிந்தனைகள் உங்களுக்கு கிடைக்க ஆன்மீகத்தையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது.